Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் சாலை விபத்தில் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் சாலை விபத்தில் சாவு

    By புதுக்கோட்டை  |   Published on : 28th January 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டை மாவட்டம்,மீமிசல் கிழக்குக் கடற்கரை சாலையில் தவறவிட்ட பேருந்தைப் பிடிக்கும் முயற்சியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே வேல்வாரி பேருந்து நிறுத்தத்தில் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவியான புரசக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் அம்பிகா (21), புதுகை அரசுக் கல்லூரி மாணவியான பழனிவேல் மகள் சரஸ்வதி (22) ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை பேருந்துக்காகக் காத்திருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த அறந்தாங்கி செல்லும் தனியார் பேருந்து நிற்காமல் சென்றதாம். இதனால் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சு. கருப்பையாவிடம் (35) கல்லூரிக்கு நேரமாகிவிட்டதாகவும், நிற்காமல் சென்ற பேருந்தில் தங்களை ஏற்றிவிடுமாறும் கேட்டதையடுத்து, கருப்பையா இருவரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் அந்தப் பேருந்தைப் பிடிக்க வேகமாகச் சென்றாராம்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கொலுவனூர் அருகே எதிரே சுமையேற்றி வந்த டாரஸ் லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தகவலறிந்த மீமிசல் போலீஸார் சடலங்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai