Enable Javscript for better performance
சமுதாயத்தை இணைப்பது மதம், இசை, நுண்கலை- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை,ஜன. 27: மதம்,இசை,நுண்கலை ஆகியவைதான் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் சங்கிலி என்றார் கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜானகிசுவாமிநாதன்.

    இந்தக் கல்லூரியில் அதன் தலைவர் குரு. தனசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவின் கலை விழாவைத் தொடக்கிவைத்து இசையின் தோற்றமும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:

    இந்தியாவின் சமூக அமைப்பு காலப்போக்கில் படிப்படியாக உருவானதாகும். இந்திய மக்களின் இன்றைய வாழ்க்கை என்பது பழங்காலம் தொடங்கி இன்றுவரை பிற இனத்தைச் சேர்ந்தவர்களின் படையெடுப்பு உள்ளிட்டவற்றுடன் இணைந்து ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு. இந்தியாவில் அனைத்து சமூகத்தினரின் வாழ்க்கையும் எல்லாக் காலங்களிலும் இசை நிறைந்து இனிமையானதாகவே இருந்துள்ளது.

    அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு படையெடுப்புகளால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்ததால் நுண்கலைகளை வளர்க்கவும் மேம்படுத்தவும் அதிக நேரத்தைச் செலவிட முடிந்தது.

     தஞ்சையை ஆண்ட சரபோஜி, மைசூரை ஆண்ட உடையார்கள், திருவிதாங்கூர் மன்னர்கள் ஆகியோர் தேர்ச்சி பெற்ற இசைக் கலைஞர்களாகத் திகழ்ந்தனர். ராமநாதபுரம் மன்னர் போன்ற குறுநில மன்னர்களும் இசையின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றினர்.

    ஒரு காலக்கட்டத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்ததால் இசைக்கு ஆதரவு தர யாருமில்லாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகே தர்பார்களுக்குப் பதிலாக இசையை வளர்க்க சபாக்களும் பிற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

    நவீனத்தில் அக்கறை செலுத்தும் இளைஞர் சமுதாயத்துக்கு பழங்கால நாடகங்கள் அன்னியமாகிவிட்டன.

    அதனால்தான் இத்தகைய விழாக்கள் மூலம் நடத்தப்படும் பழைய தமிழ் நாடங்களை இப்போதுள்ள இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாகிறது என்றார் அவர்.

    செயலர் வீ. வைத்தியநாதன், அறங்காவலர் உறுப்பினர்கள் கே.ஆர். குணசேகரன் கே. ரெங்கசாமி அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பல்வேறு நாடகங்களை மாணவிகள் நடத்தினர். கவிஞர் மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் பி. பத்மாவதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai