Enable Javscript for better performance
புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 போலீஸாருக்கு \\\"தமிழக முதல்வர்\\\' விருது- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 போலீஸாருக்கு "தமிழக முதல்வர்' விருது

    By புதுக்கோட்டை  |   Published on : 28th January 2015 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர் 17  பேருக்கு சிறந்த சேவைக்காக முதல்வர் விருது  சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவின்   வழங்கப்பட்டது.

    தமிழக காவல் துறையில் எந்தப் புகாரும்,எவ்வித தண்டனையும் பெறாமல் 10 ஆண்டு சேவையாற்றிய போலீஸாருக்கு முதல்வரின் பதக்கம்,விருது ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.

    அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ்மனோகர், ஜி. பாபு,பி அசோகன், கே. சரவணன், எஸ். செண்பகராமன், எஸ். வீராசாமி, பி.மதியழகன், எஸ். ஆனந்த், கே. பாரதிதாசன், எஸ். விஜயாலயன்,கே.ஆர். மனோகரன்,வீரமுத்து, ஆர். குணசேகரன், எம். புவனேஸ்வரன்,ஆர். ராஜசேகரன், எஸ். முருகேசன் ஆகிய 17 பேர் முதல்வர் விருது,பதக்கம் பெற்றனர்.

      தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai