Enable Javscript for better performance
புதுவாழ்வுத் திட்டச் செயல்பாடுகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    புதுவாழ்வுத் திட்டச் செயல்பாடுகள் ஆய்வு

    By புதுக்கோட்டை  |   Published on : 28th January 2015 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை, ஜன. 27: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டம் மூலம் செயல்பட்டுவரும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் செயல்பாடுகளை மாநில வல்லுநர் அண்மையில் ஆய்வு செய்தார்.

    மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்படும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய திட்டத்தின் மாநில தகவல் முறை மேலாண் வல்லுநர் சதீஷ்குமார் அண்மையில் வந்தார்.

    இவரை மாவட்ட புதுவாழ்வுத்திட்ட மேலாளர் எஸ். வசுமதி வரவேற்று கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் செயல்படும் கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு அழைத்துச் சென்றார். காட்டுநாவல்,பிசனாத்தூர்,அக்கச்சிப்பட்டிஆகிய கிராமங்களில்  உள்ள வறுமை ஒழிப்புச் சங்கங்களின் இலக்கு மக்களின் நிலை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, முதல் தவணைநிதி பெறுவதற்கான இலக்கை அடைதல், ஒத்த தொழில் குழுக்களை வலுப்படுத்துதல்,  போன்ற செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றில் மேம்படுத்தக்கூடிய பணிகள் குறித்து சங்கத்தினரிடம் அறிவுறுத்தினார். உதவித் திட்ட மேலாளர்கள் நட்ராஜ்,ஆரோன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai