Enable Javscript for better performance
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் நலத் திட்ட உதவி அளிக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் நலத் திட்ட உதவி அளிக்க முடிவு

    By புதுக்கோட்டை  |   Published on : 28th January 2015 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை, ஜன. 27: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுகை நகராட்சியில் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பதென மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

    புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவைத் தலைவர் ரெத்தினம் தலைமையில் நடந்த  மாவட்ட, நகர, திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் முதல் தேதியன்று புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் கட்சிக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது.

    புதிதாகத் தோந்தெடுக்கபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது.

    2016 பேரவைத் தோóதலின் போது நமக்குள் உள்ள பிரச்னைகளை மறந்து தலைவர் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க  ஒற்றுமையுடன் பாடுபடுவது,

     வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலர்  பெரியண்ணன்அரசு, முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், நகரச் செயலர் நைனாமுகமது, பல்வேறு அணி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai