Enable Javscript for better performance
வாடகை வசூல் : நகராட்சி அதிரடி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

    புதுக்கோட்டை நகரில் மேல 4, தெற்கு 2 ஆகிய பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமாக 64 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து நகராட்சிக்கு வர வேண்டிய வாடகை ரூ. 10 லட்சத்திற்கும் மேல் நிலுவையில் உள்ளதாம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களுக்கு வாடகை செலுத்த நேரடியாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும் வலியறுத்தப்பட்டது. ஆனால் பயனில்லை.

    இந்நிலையில், நகராட்சி ஆணையர் (பொ) ஜெ. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வெளளைச்சாமி, மனோகரன், அலுவலக உதவியாளாகள் கருப்பையா, சுப்பிரமணியன், எழுத்தாó திருமலைக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாடகை நிலுவை வைத்துள்ள 7 கடைகளுக்கு பூட்டுப்போடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த அதிரடியால் மற்ற கடைக்காரர்கள் தங்களுடைய வாடகை பாக்கியை அவரச அவசரமாக நகராட்சி கருவூலத்தில் செலுத்தி, பிரிவு எழுத்தரிடம் பதிந்து கொண்டனர்.

    இதேபோல புதிய, பழைய பேருந்து நிலையம், தெற்கு 4, குமுந்தான் குளம், சந்தப்பேட்டை போன்ற பகுதியில் உள்ள கட்டடங்கள், காலியிட மனைகளின் குத்தகைதாரர்களும் வாடகை பாக்கியை தாமதமின்றிச்  செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கடைகளின் உரிமத்தை ரத்து செய்து மறு ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai