Enable Javscript for better performance
வேலை உறுதித் திட்டம் : காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலை உறுதித் திட்டம் : காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    By புதுக்கோட்டை  |   Published on : 28th January 2015 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை, ஜன. 27: ஏழைகளின் பசியைப் போக்கும் வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயலும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்சி,எஸ்டி. பிரிவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகள்: காங்கிரஸால் கொண்டு வரப்பட்ட வேலை உறுதித் திட்டமானது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத் திட்டத்தைக் கைவிட மாட்டோம் என பாஜக உறுதியளித்தது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் இத்திட்டத்தை படிப்படியாக முடக்கும் நடவடிக்கையில் அந்த அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    இத்திட்டம் முடங்கினால் கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்வாதாரம் சீரழியும். மேலும், இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 51 சதமும், மகளிர் 47 சதமும் பயனாளிகளாக உள்ளதால்,இந்தத் திட்டத்தை எவ்வித மாற்றமுமின்றி பாஜக அரசு செயல்படுத்த வேண்டும்.

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தி. புஷ்பராஜ் தலைமை வகித்தார்.

    காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி. பிரிவு மாவட்ட நிர்வாகிகள் எம். முருகானந்தம், டி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமயம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொதுச்செயலர் மா. தமிழ்ச்செல்வன், நகரத் தலைவர் ஏ. இப்ராகிம்பாபு, நிர்வாகி பென்னட் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பேசினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai