Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்தநாள்: சிலைக்கு மாலை- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் வியாழக்கிழமை மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ்: மாவட்டத் தலைவர் தி. புஷ்பராஜ் தலைமையில், மாநிலப் பொதுச் செயலர் ஏ. சந்திரசேகரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.எஸ். தனபதி, அரிமளம் அ. சுந்தர்ராஜன், நகர்மன்ற முன்னாள் தலைவர் துரை திவியநாதன், நிர்வாகிகள் ஏ. இப்ராகிம்பாபு, வி. முருகேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    திமுக: மாநில இலக்கிய அணிச் செயலர், முன்னாள் எம்எல்ஏ ரா.சு. கவிதைப்பித்தன், நகர்மன்ற உறுப்பினர்கள் மணிவேலன், டி. சந்தோஷநாதன், லியாகத்அலி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    திராவிடர் கழகம்: மாவட்டத் தலைவர் மு. அறிவொளி தலைமையில் நிர்வாகிகள் ப. வீரப்பன், ஆ. சுப்பையா, செ. ராசேந்திரன், அ. சரவணன், சு. கண்ணன், ராவணன், ரெ.மு. தருமராசு, சாமி. இளங்கோ, பெ. தர்மன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    மக்கள் நலக் கூட்டணி: முன்னாள் எம்எல்ஏ எஸ். ராஜசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் க. சந்திரசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், நிர்வாகிகள் விடுதலைக்கனல், தெ. கலைமுரசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் எம். உடையப்பன், நிர்வாகிகள் எஸ். பொன்னுச்சாமி, எம். ஜியாவுதீன், எம். பிரவாகன், சி. அன்புமணவாளன், சண்முகபழனியப்பன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    தேமுதிக: மாவட்டச் செயலர் க. ராமசாமி தலைமையில் பொருளாளர் எஸ்.கே. கதிரவன், நிர்வாகிகள் கே.ஆர். ஞானம், ஆர். செந்தில்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    பாஜக: பாஜக சார்பில் எஸ்சி பிரிவு நிர்வாகி கோ. கணேசன் தலைமையில், மாவட்டச் செயலர் ராம. சேதுபதி, மாநிலச் செயலர் புரட்சிக்கவிதாசன், ஏ.சி.எஸ். மணிகண்டன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் முத்து தலைமையிலும், புரட்சிபாரதம் சார்பில், நிர்வாகி முள்ளூர் தியாகு தலைமையிலும், இந்திய குடியரசுக் கட்சி சார்பில் மாநிலச் செயலர் நாகராஜன் தலைமையிலும், புதிய தமிழகம் சார்பில் நிர்வாகி கே. தங்கவேல் தலைமையிலும், அம்பேத்கர்-பெரியார்-கார்ல்மார்க்ஸ் அமைப்பின் சார்பில் மருத்துவர் என். ஜெயராமன் தலைமையிலும், திருமயம் பெல் அண்ணா தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பொன்னமராவதி: பொன்னமராவதியில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

    பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற விழாவுக்கு தேமுதிக ஒன்றியச் செயலர் சிஆர். சின்னக்கருப்பன் தலைமைவகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பொன். தமிழரசன் முன்னிலை வகித்தார்.

    விழாவில், அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ஏனாதி ஏஎல். ராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் கே. ராஜா, மதிமுக இளைஞர் அணி செயலர் ஆர். பிரின்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமயம் தொகுதி செயலர் வை. சுடர்வளவன் ஆகியோர் அம்பேத்கரின் சிறப்புகளை விளக்கினர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிள் அ. அரசு, ரெ. தமிழமுதன், எஸ். ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் எஸ். நல்லதம்பி, ஆர். பிரதாப்சிங், மதிமுக நகரச் செயலர் கேபி. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அறந்தாங்கி:  அறந்தாங்கியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    அம்மா உணவகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப் படத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் தலைமையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. கராத்தே கண்ணையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில், தேமுதிக நகரச் செயலாளர் எஸ்.டி. சோலைராஜ், மு. மணிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் திருமாறன், மதிமுக ஒன்றியச் செயலாளர் பாண்டிகுடி ராஜேந்திரன், நகரச் செயலாளர் க. மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆ. ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    இதேபோல, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு எஸ்.சி. எஸ்.டி அரசு ஊழியர் சங்கம் சார்பில், அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் கே.எம். சுப்பையா, தெய்வக்கனி, வீரமணி உள்ளிட்ட  ஊழியர் சங்கத்தினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai