Enable Javscript for better performance
கல் குவாரியை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    கல் குவாரியை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் முடிவு

    By விராலிமலை  |   Published on : 15th April 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயத்தை பாதிக்கும் கல் குவாரியை மூடாவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுயஉதவிக் குழுக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் விராலிமலை பகுதியில் வியாழக்கிழமை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டி, கீழஇன்பம்பட்டி, மேல இன்பம்பட்டி, காயம்பட்டி, செல்லம்பட்டி, லஞ்சமேடு உள்ளிட்ட பகுதியில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு அரசு நிர்ணயித்துள்ள அளவை மீறி அதிகமான ஆழத்தில் பாறைகளை வெட்டி எடுத்து வருவதால், நிலத்தடிநீர் குறைந்து வருவதாகவும், குவாரி அருகே சிறுவர் பள்ளிகள் இயங்கி வருவதோடு, அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி, மகளிர் சுய உதவி குழுக்களும், நியூ ஸ்டார், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் அகரப்பட்டி பொதுமக்கள் உள்ளிட்டோர் வரும் மே 16-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விராலிமலை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai