Enable Javscript for better performance
புதுகையில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புதுகையில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

    By புதுக்கோட்டை  |   Published on : 15th April 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

    புதுக்கோட்டை நகரில் தெற்கு நான்காம் வீதியிலுள்ள தண்டாயுதபாணி கோயில், பிரஹதாம்பாள்கோயில், திருவப்பூர் மாரியம்மன்கோயில், குமரமலை பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதேபோல, திருமயம் சிவன்கோயில், இலுப்பூரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில், தரம்தூக்கி பிடாரி அம்மன்கோயில், இருந்திரப்பட்டி முத்துமாரி அம்மன்கோயில், அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம் சத்குரு சம்மார மூர்த்தி சுவாமி கோயில், அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோயில், திருவேங்கைவாசல் பிரகதாம்பாள் உடனுறை வியாக்ர புரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai