Enable Javscript for better performance
புதுகை நகரில் குடிநீர் தட்டுப்பாடு: மறியல்- Dinamani

சுடச்சுட

    

    புதுகை நகரில் குடிநீர் தட்டுப்பாடு: மறியல்

    By புதுக்கோட்டை  |   Published on : 15th April 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை நகராட்சி 40-வது வார்டு பூங்கா நகர் மேற்குப் பகுதியில் நீடித்து வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூங்கா நகர் மேற்கு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் நகராட்சி சார்பில், நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதிக்கு 10 நாளைக்கு ஒருமுறை மட்டுமே நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மிகக் குறைந்த கால அளவே விநியோகிக்கப்பட்ட இந்த தண்ணீரும் சுத்தமாக இல்லையாம்.

    இதனால், இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்றாலும், குடிநீருக்கான தேவை அதிகரித்து வருவதால் தட்டுப்பாடு தீரவில்லை.

    இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற நகராட்சி ஆணையர் (பொ) ராஜாராம், பொதுமக்களிடம் உரிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai