Enable Javscript for better performance
மீட்புப் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்புத் துறையினருக்கு வீரவணக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மீட்புப் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்புத் துறையினருக்கு வீரவணக்கம்

    By புதுக்கோட்டை  |   Published on : 15th April 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீட்புப் பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    கடந்த 1944, ஏப். 14-ம் தேதி மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் நேரிட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்புத் துறை வீரர்கள் 66 பேர் உள்பட மொத்தம் 220 பேர் உயிரிழந்தனர். அந்த நாளை நீத்தார் நினைவுதினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டுமென 1963-ல் மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் ஏப். 14-ம் தேதியை நீத்தார் நினைவுநாளாக தீயணைப்புத் துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை தீயணைப்பு மீட்புப் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் இதே நாளில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்குள்ள தியாகிகள் நினைவுத்தூணில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஹக்கீம்பாட்ஷா தலைமையில், மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர். சாந்தார், தீத்தடுப்புக் குழு நிலைய அலுவலர் சத்தியகீர்த்தி, தீயணைப்பு வீரர்கள் திரளானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, வாரம் முழுவதும் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்படுமென தீயணைப்புத் துறையினர் உறுதி ஏற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai