Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை இணையதளத்தில் உறுதிசெய்யும் வசதி- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை இணையதளத்தில் உறுதிசெய்யும் வசதி

    By புதுக்கோட்டை  |   Published on : 15th April 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் பெயர், புகைப்படம் இடம்பெற்றுள்ள விவரங்களை இணையதளம் மூலம் உறுதிசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா, பெயர் இடம்பெற்றிருப்பின் புகைப்படம் சரியாக உள்ளதா என்பதை அறிந்துகொள்ளும் வகையில், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் தகவல் மையங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வாக்காளர்  சேவை மையம் இயங்கி வரும் இடங்கள், தொலைபேசி எண்: சார் ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை- 04322 - 222219, 99437 05780. நகராட்சி அலுவலகம், புதுக்கோட்டை- 04322-222252. வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை - 04322- 221566. வட்டாட்சியர் அலுவலகம், கறம்பக்குடி- 04322-255199. உடஐஇ -என டைப் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 1950 என்ற இலவச எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

    w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் வாக்காளர் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், தேர்தல் விதிமுறைகளின்படி, பொதுமக்களுக்கு உதவும் வகையில், 24 மணி நேரமும், சார் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04322-222219 மற்றும் செல்லிடப்பேசி எண்: 99437 05780 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    தேர்தல் நாளன்று ஏற்படும் எதிர்பாராத சிரமங்களை தவிர்க்கும் வகையில், வாக்காளர் சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவிதமான கையூட்டும் பெறாமல் 100% நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai