Enable Javscript for better performance
விராலிமலை தொகுதிக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் முதல்வர்: விஜயபாஸ்கர் பெருமிதம்- Dinamani

சுடச்சுட

    

    விராலிமலை தொகுதிக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் முதல்வர்: விஜயபாஸ்கர் பெருமிதம்

    By விராலிமலை  |   Published on : 15th April 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்கு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அள்ளிக்கொடுத்துள்ளார் என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

    விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி விராலிமலை கடைவீதி, கிழக்குப் பகுதியில் உள்ள பிலிப்பட்டி, பன்னீர்பட்டி, ஆலங்குளம், வேலூர், அக்கல்நாயக்கன்பட்டி, மேலபச்சக்குடி, குன்னத்தூர், மதயானைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வியாழக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

    விராலிமலை ஒன்றியம், ஆலங்குளம் ஊராட்சியில் வாக்கு கேட்டு விஜயபாஸ்கர் பேசியது:

    கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரியை புதுக்கோட்டையில் அமைக்க அரசு ஆணை வெளியிட்டு மருத்துவ கல்லூரிக்கு தேவையான நிதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் விருப்பமான குடுமியான்மலையில் அரசு வேளாண்மை கல்லூரி, விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் அள்ளிக் கொடுத்துள்ளார்.

    பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ள இத்தொகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு என்றும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், தமிழக முதல்வராக ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்தவும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

    ஒன்றியச் செயலாளர் மு. சுப்பையா (மேற்கு), மு. திருமூர்த்தி (கிழக்கு), ஆத்மா குழுத் தலைவர் எஸ். பழனியாண்டி, கூட்டுறவு சங்க இயக்குநர் ஜெ.ஆர். அய்யப்பன், எம். முரளிதரன், என். மாமுண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai