Enable Javscript for better performance
குறைந்த நீரில் கூடுதல் மகசூல் பெற மக்காச்சோளம் பயிரிடலாம்- Dinamani

சுடச்சுட

    

    குறைந்த நீரில் கூடுதல் மகசூல் பெற மக்காச்சோளம் பயிரிடலாம்

    By பொன்னமராவதி  |   Published on : 20th February 2016 05:05 AM  |   அ+அ அ-   |    |  

    பொன்னமராவதி வட்டார விவசாயிகள் குறைந்த நீரில் அதிக வருமானம் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் என்றார் வேளாண் உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வட கிழக்கு பருவ மழை மிகவும் தாமதமாக பெய்ததால் சராசரி நெல் சாகுபடி பரப்பான 4,000 ஹெக்டரில் 1,540 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும்,சிறுதானிய பயிர்கள் 7 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    உணவு தானிய உற்பத்தியின் விளைச்சலை பெருக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே,குறைந்த நீரினை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய சிறு தானியப் பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெறலாம். நீர்ப்பாசன வசதிக்கேற்ப வீரிய மக்காச்சோள பயிரினை சாகுபடி செய்வதின் மூலம் அதிக மகசூலும்,கூடுதல் வருமானமும் பெறலாம்.

    ஏக்கருக்கு 6 கிலோ விதைகளை 60  ஷ் 20 செ.மீட்டர் இடைவெளியில் நீளமான பார்களில் விதைப்பு செய்ய வேண்டும். பயிர் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டரில் 6 - 7 செடிகள் இருக்க வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடுவது நல்லது. அல்லது தொழு உரம் மற்றும் தழை, மணி,சாம்பல் சத்துக்கள் இடலாம். விதைகளை விதைத்தவுடன் ஏக்கருக்கு 5 கிலோ சிறு தானிய நுன்னூட்டக் கலவை உரத்தினையும் தூவ

    வேண்டும். களைகளை கட்டுப்படுத்த விதைத்த 3 வது நாள் அட்ரசின் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 500 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

     நன்கு முதிர்ச்சி அடைந்த 100 முதல் 110 நாள்கள் வயதுடைய கதிர்களை 12% வரை காயவைத்து  விற்பனை செய்யலாம். இதன் மூலம் 3 மாதத்தில் குறைந்த பட்சமாக ஏக்கருக்கு ரூ 20 ஆயிரத்துக்கு குறையாமல் வருமானம் பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp