Enable Javscript for better performance
ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது

    By பட்டுக்கோட்டை  |   Published on : 21st July 2016 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47). மத போதகர். இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார்.

    இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர். இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது.

    இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை  புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai