Enable Javscript for better performance
கந்தர்வகோட்டையில் துளிர் திறனறிவு தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
    உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் குமரன், வெங்கடாசலம் ஆகியோர் தேர்வை தொடங்கி வைத்தனர். சிறப்பு பார்வையாளர் உஷா பார்வையிட்டார். தேர்வு ஒருங்கிணைப்பாளராக ரமேஷ்குமார், ரகமதுல்லா ஆகியோர் செயல்பட்டனர்.
    தேர்வில் புனல்குளம், வீரடிப்பட்டி, சோழகம்பட்டி, கொத்தகப்பட்டி, காட்டுநாவல், மட்டாங்கால், பகட்டுவான்பட்டி, ஆத்தங்கரைவிடுதி, மஞ்சப்பேட்டை, அண்டனூர், வேம்பன்பட்டி, அக்கச்சிப்பட்டி, மங்கனூர், மெய்குடிப்பட்டி, அரியாணிப்பட்டி, மோகனூர், சங்கம்விடுதி ஆகிய பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 264 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் துரையரசன் செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai