Enable Javscript for better performance
காலமுறை ஊதியம்: சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியப் பேரவைக் கூட்டம் மற்றும் சென்னையில் காத்திருப்பு போராட்ட விளக்கக் கூட்டம் கந்தர்வகோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் அ. கன்னிகா தலைமைவகித்தார். எ. மகாலிங்கம், எ. நிர்மலா, வி. தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தசாமி கூட்டத்தைத் தொடக்கிவைத்தார். கூட்டத்தில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையான முறையான காலமுறை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3500 வழங்க வேண்டும், வரும் டிசம்பர் 7-ம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    முன்னதாக ஒன்றிய இணைச் செயலாளர் எஸ். ரெங்கன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கு. சக்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai