Enable Javscript for better performance
பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் நிலை குறித்த கலந்தாய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் நிலை குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

    By DIN  |   Published on : 28th November 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்சாலைகள், ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் பெண்களின் நிலை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருவரங்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவரங்குளம் சமுதாயக் கூடத்தில் திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற பஞ்சாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் வளரிளம் பெண்களின் நிலை குறித்த ஊராட்சி அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு  அமைப்பின் இயக்குநர் எம். மகேந்திரன் தலைமை வகித்தார்.
    முன்னாள் ஊராட்சித் தலைவர் சம்சத்பேகம்கனி முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பா. மெல்வின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் ஆகியோர் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாலைகள், பனியன் தொழில்சாலைகளில் பணியாற்றி பாதிக்கப்பட்டு வரும் வளரிளம் பெண்களை கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றம், பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுதலை பெறச் செய்வது, கிராமப்புற பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்த பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai