Enable Javscript for better performance
பொன்னமராவதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான கூட்டம்

    By DIN  |   Published on : 28th November 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் ஊராட்சிச் செயலருக்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு கிராம ஊராட்சி ஆணையர் து. பாஸ்கர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் வை. சதாசிவம் முன்னிலை வகித்தார்.  
    கூட்டத்தில் ஒன்றியத்துக்குட்பட்ட 42 ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக சுத்தம் செய்தல், தடையின்றி குடிநீர் வழங்கல், பதிவேடு பராமரித்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான மின்மோட்டார் பழுது குறித்த விவரத்தினை உடனடியாக ஊராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
    துணை ஆணையர்கள் வெங்கடேசன், பஞ்சநாதன், பேச்சியம்மாள், மரகதம், சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai