Enable Javscript for better performance
மண்டலப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மண்டலப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 28th November 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மண்டல அளவிலான போட்டிகளில் வென்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில்  வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
    பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் வே. அருமைக்கண்ணு முன்னிலையில் நடந்த நிகழ்வுக்கு புதுகை ரோட்டரி சங்கத் தலைவர் ஏ. ஆரோக்கியசாமி, ரோட்டரி மாவட்ட மக்கள் தொடர்பு இயக்குநர் க. மோகன்ராஜ் ஆகியோர் மாணவிகளுக்கு நினைவுப் பரிசளித்தனர்.
    குத்துச்சண்டை போட்டியில் ஆர். ஜீவிதா, ஸ்வேதா, ஆர். தீபபிரியா ஆகிய 3 பேர் தங்கப் பதக்கத்தையும், எம். சாந்தினி, எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். ஜூடோ போட்டிகளில் சுக்ரியாபானு, கே. நந்தினி, பாரதி, செளமியா, கலைச்செல்வி ஆகிய 5 பேர் தங்கப் பதக்கத்தையும், தேக்வாண்டோ போட்டியில் ஆர். மஞ்சுளா, எம். திவ்யா ஆகிய 2 பேர் முதலிடம் பெற்றனர். நீச்சலில் ஆர். தனலெட்சுமி, எம். பவித்ரா, எஸ். சுதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மேலும் 800, 1500, 5000 மீட்டர் தடகளப் போட்டியில் எஸ். கோப்பெருந்தேவி, எஸ். பவானி ஆகியோர் முதலிடம் பெற்றனர். சிலம்பப் போட்டியில் ஜே. நந்தினி, எம். மாலதி, ஏ. ஆதிலெட்சுமி ஆகிய 3 மாணவிகள் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளத் தகுதிபெற்றனர்.
    நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர் ஜெயமதி, உடற்கல்வி இயக்குநர் வி. ராஜசேகர், உடல்கல்வி ஆசிரியர் எம். கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai