Enable Javscript for better performance
அரிமளம் ஒன்றியத்தில் ரூ. 21 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரிமளம் ஒன்றியத்தில் ரூ. 21 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 08th October 2016 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்கு உள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் ரூ. 21.40 லட்சத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஓணாங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 90 ஆயிரத்தில் கட்டப்பட்ட மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகை, பிலியவயல் ஊராட்சி, வம்பரம்பட்டியில் ரூ. 20.50 லட்சத்தில் வளர்க்கப்படும் வேம்பு, புளி, புங்கன், கருவை, நாவல் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் உள்பட ரூ. 21.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    மேலும், மரக்கன்றுகளை குளங்கள், கண்மாய்கள், சாலையோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்டு வளர்த்து தினமும் உரிய முறையில் நீரூற்றி பராமரிக்கவும், மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகையில் மண்புழுக்கள் மூலம் மண்புழு இயற்கை உரத்தை தயாரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவது, பணிகளை தரமாக முடித்து உரிய முறையில் பராமரிப்பது, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, உதவிப் பொறியாளர்கள் ஆனந்தராஜ், முகம்மதுரபீக், பணி மேற்பார்வையாளர்கள் அழகப்பன், வெளóளைச்சாமி, சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai