Enable Javscript for better performance
"ஆர்வமிருந்தால் விளையாட்டிலும் சாதிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆர்வமிருந்தால் படிப்புடன் விளையாட்டிலும் சாதனை படைக்கலாம் என்றார் சென்னை கலால், சுங்கவரித் துறை கண்காணிப்பாளரும், சென்னை பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் தலைமை பயிற்சியாளருமான பி. நாகராஜன்.
    புதுக்கோட்டை ஏ.டி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் பேசியது:
    மாணவர்கள் படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். படிப்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஆனால், வாழ்க்கை முழுவதும் உங்களைத் தொடர்ந்து வருவது விளையாட்டுக்களும், உடற்பயிற்சியும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைந்துள்ள பலரும் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டுத்தான் அந்த நிலையை அடைந்துள்ளனர். இளமையில் கல் என்பதைப் போல, ஓடி விளையாடுவதன் முக்கியத்துவத்தையும் மாணவப் பருவத்தில் உணராதவர்கள் வாழ்க்கையில் தோற்று நிற்கின்றனர். படிப்பில் உள்நாட்டில் சாதனை புரியலாம். ஆனால், விளையாட்டில் மட்டும்தான் உலகின் கவனத்தை எளிதில் ஈர்த்து சாதனைபடைக்க முடியும் என்றார்.
    இதில், 100 மீ, 200 மீ, 1500 மீ. ஓட்டம், தொடர்ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
    பள்ளித் தாளாளர் ஏ. தர்மராஜ்பிரபு தலைமை வகித்தார். தஞ்சை ஜனனி ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் தலைமைப் பயிற்றுநர் சேகர், உடற்கல்வி இயக்குநர் கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
    பள்ளிப் பொருளாளர் த. சரவணகுமார், உடற்பயிற்சி ஆசிரியர்கள் எஸ். சரண்யா, விக்னேஷ்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வி. ராமச்சந்திரன் வரவேற்றார். உடற்பயிற்சி ஆசிரியர் எஸ். சரண்யா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai