Enable Javscript for better performance
கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை இளைஞர் இறந்தார்.
    கந்தர்வகோட்டை அருகேயுள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (23), விவசாயி. இவரது வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்பதால், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி மின்வயரை சரிசெய்துள்ளார்.
    அப்போது மின்சாரம் பாய்ந்து மகேந்திரன் தூக்கிவீசப்பட்டு காயமடைந்தார். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் இறந்தார்.
    இது குறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai