Enable Javscript for better performance
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைஓய்வூதியர் சங்க மாவட்ட கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைஓய்வூதியர் சங்க மாவட்ட கூட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வே. ஜெகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம். முத்தையா, என். ராமச்சந்திரன், பி. ஆழ்வாரப்பன், ஆர். சுப்பிரமணியன், ஆர். ராஜேந்திரசிங், சேகர், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கூட்டத்தில், மத்திய அரசின் ஊதியக் குழுப் பயன்களை தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai