Enable Javscript for better performance
பள்ளி மாணவி கடத்தல் வழக்கு: விசாரணைக்கு வந்தவர் தப்பி ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவி கடத்தல் வழக்கு: விசாரணைக்கு வந்தவர் தப்பி ஓட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்ததான வழக்கில், விசாரணைக்கு வந்த இளைஞர் காவல் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தப்பிச்சென்றார்.
    திருமயம் அருகே இருதயபுரம் கிருஸ்து ராஜா உயர்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்துவந்த மாணவியை, அறந்தாங்கி அருகே அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அவரது சகோதரியின் கணவர் சுரேஷ்குமார் (25) சில நாள்களுக்கு முன்பு, தேவகோட்டையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று அங்கு 3 நாள்கள் தங்கவைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்த புகாரின் பேரில், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
    இதையடுத்து, வெள்ளிக்கிழமை காவல் நிலையத்துக்குச் சென்ற சுரேஷ்குமார் தன்னை சிறையில் அடைக்கவுள்ள விஷயம் தெரியவந்ததால், அங்கிருந்து போலீஸாருக்குத் தெரியாமல் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai