Enable Javscript for better performance
புதுகையில் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சுமார் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
    பள்ளி கல்வித் துறையின் சார்பில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 14, 17, 19 வயதுக்கு ட்பட்ட மாணவ, மாணவிகள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 3 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் ஒட்டப் பந்தயம் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. தொடர்ந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், வட்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல், தொடர் ஒட்டப் பந்தயம், கம்பு ஊன்றி தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை, திருமயம், இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, கீரனூர் உள்பட புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகள் திருச்சி மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதிபெறுவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai