Enable Javscript for better performance
புதுகையில் தகவல்களை தாங்கி நிற்கும் சுற்றுச்சுவர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதுகையில் தகவல்களை தாங்கி நிற்கும் சுற்றுச்சுவர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை உள்ள பிரதான சாலையின் இருபுறத்திலும் உள்ள சுற்றுச்சுவர்களில் பொதுமக்களுக்குத் தேவையான பல தகவல்கள் எழுதப்பட்டுள்ளதால், இந்த இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரியின் எதிரே உள்ள மிகப்பெரிய விளையாட்டுத் திடலின் சுற்றுச்சுவரில் பல்வேறு தகவல்கள் எழுதப்பட்டுள்ளதால், அதைப் பார்ப்பவர்கள் அனைவரும் நின்று செய்திகளைப் படித்துவிட்டுச் செல்லும் நிலை உள்ளது. சுமார் 200 மீட்டர் நீளம், 6 அடி உயரம் கொண்ட இச்சுவரில் புதுக்கோட்டையை ஆண்ட சமஸ்தான மன்னர்களின் குறிப்புகள், மன்னர் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவர்கள், டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களிடம் கேட்ட உறுதிமொழிகள், மகாத்மா காந்தியின் 7 கடமைகள், விவேகானந்தரின் பொன்மொழிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.
    கல்வி நிலையங்களின் சுற்றுச்சுவர்களைப் பயனுள்ள வகையில் மாற்ற வேண்டுமென இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சியில் இது சாத்தியமாகியுள்ள நிலையில், இவற்றை மறைக்கும் விதமாக சுவரோரங்களில் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டது, இந்த முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தது.
    இதுகுறித்த அறிந்த நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் இருந்த கடைகளை வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளது. இந்நிலையில், மீண்டும் அப்பகுதிகளில் கடைகள் உருவாகாமல் தொடர்ந்து கண்காணித்து தற்போதுள்ள நிலையை நீடிக்கச்செய்ய வேண்டுமென கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் எதிர்பார்க்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai