Enable Javscript for better performance
புதுகை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கு அறை ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    புதுகை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கு அறை ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 08th October 2016 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ரூ. 87.82 லட்சத்தில் கட்டப்பட்ட 26 அறைகள் கொண்ட புதிய கட்டடத்தில் வழக்குரைஞர்களுக்கு அலுவலக அறைகளை ஒதுக்கீடு செய்து ஒப்படைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி பங்கேற்று, மூத்த வழக்குரைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலக அறைகளின் சாவியை வழங்கிப் பேசியது:
    இந்த நீதிமன்ற கட்டடத்தின் மேல்தளத்தில் கூட்ட அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீதி பரிபாலனம் குறித்து பல்வேறு கல்வெட்டுச் செய்திகள் உணர்த்தி வருகின்றன. சட்டக்கல்லூரி, சட்டப்பள்ளி ஆகியவற்றின் மூலம் படித்து வரும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    வழக்குரைஞர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கையே காரணம். உரிமையியல் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை விரைந்து முடித்தால்தான் நீதிமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை நிலைத்திருக்கும் என்றார்.
    நிகழ்ச்சியில், முதன்மை நீதிபதி கே. முரளிசங்கர், கூடுதல் மாவட்ட நீதிபதி எம். சுமதி சாய்ப்பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். பிரின்ஸ் சாமுவேல்ராஜ், தலைமைக் குற்றவியல் நீதிபதி அனில்குமார், மகளிர் நீதிமன்ற நீதிபதி லியாகத்அலி, நீதிபதி பி. நாகராஜன், வழக்குரைஞர் சங்கத் தலைவர் அ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai