Enable Javscript for better performance
மறைந்த முன்னாள் அமைச்சருக்கு குருபூஜை : திரளானோர் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த முன்னாள் அமைச்சருக்கு குருபூஜை : திரளானோர் அஞ்சலி

    By DIN  |   Published on : 08th October 2016 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில், மறைந்த முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்திற்கு 6-ம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். அதிமுகவைச் சேர்ந்த இவர், 3 முறை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர், கடந்த 2010-ம் ஆண்டு அக். 7-ம் தேதி இரவு அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    இவர் இறந்த தினத்தை முத்தரையர் சமூகத்தினர் குருபூஜையாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது 6-ம் ஆண்டு நினைவுதினமான வெள்ளிக்கிழமை வடகாடு கடைவீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, வீரமுத்தரையர் சங்கத் தலைவர் கே.கே. செல்வக்குமார் தலைமையில் ஊர்வலமாகச் சென்று காகித ஆலைச்சாலை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
    மேலும், ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
    இதற்காக வடகாடு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆலங்குடி-புளிச்சங்காடு கைகாட்டி இடையே சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai