Enable Javscript for better performance
மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    புதுகை லெனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில், தனிப்பட்ட திறமைகள் வளர்ப்பு குறித்த வலிமை எனும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
    கருத்தரங்குக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன்செல்லையா தலைமை வகித்தார். சென்னை ஆல்செக் டெக்னாலஜிஸ் மனிதவள மேலாளர் வசந்த்ராகவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:
    ஈரப்பதத்தை காக்கும் மூலிகையைப் போல, புதுமையான தொழில்நுட்பங்களை ஈர்த்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புக்கு தேடல் அத்தியாவசியமாக இருக்கிறது. வேலைவாய்ப்புத் திறன்கள் மேம்பட வேண்டுமெனில், ஆங்கிலத் தொடர்புத் திறமை அவசியம் தேவை.
    மாணவர்கள் தாங்கள் கற்ற விஷயங்களை வித்தியாசமாகச் செய்து காட்ட விரும்பவில்லை. மாணவர்கள் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால முன்னேற்றங்களை அறிந்து தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
    வேலை கிடைக்காத பிரச்னை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், மாணவர்கள் சுயகற்றலின் மூலம் கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பைப் பெற தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகவல் தொடர்புத் திறன் அதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
    கடின உழைப்பு, ஸ்மார்ட் வேலைக்கு இடையே உள்ள வேறுபாட்டை உணர வேண்டும். நாள்தோறும் ஆங்கில நாளிதழ்களைப் படிக்க மாணவர்கள் தயங்கக்கூடாது. அது சரியான உச்சரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. மாணவர்கள் தமது படிப்பு, எதிர்கால வாழ்க்கை குறித்த தீவிர முனைப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, சென்னை ஐசிடிஏசிடி துணைப் பொது மேலாளர் சுரேஷ்பாபு பேசினார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், கல்லூரி இயக்குநர் பேராசிரியர் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai