Enable Javscript for better performance
முதல்வர் நலம்பெறபொன்னமராவதி, இலுப்பூரில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் நலம்பெறபொன்னமராவதி, இலுப்பூரில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 08th October 2016 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் தமிழக முதல்வர் நலம்பெற வேண்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    பொன்னமராவதி புதுப்பட்டி பிடாரி கோயில், ஒலியமங்கலம் மற்றும் மேலத்தானியம் மாரியம்மன் கோயில், வையாபுரி சுப்பிரமணியர் கோயில் ஆகிய கோயில்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    ஒன்றியச் செயலர் ராம. பழனியாண்டி, பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா, ஒன்றியக் குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா, நகரச் செயலர் அ. தங்கப்பன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மீனாள் முருகப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் மூ.சு. மூக்கையா, நிர்வாகிகள் வை. பழனிச்சாமி, பி. மாரிமுத்து, மோகனா சேகர், விஎஸ். ஆவடித்தேவன், பிஎல். ராஜேந்திரன், பிஎல். மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    விராலிமலை: இலுப்பூர் தரம்தூக்கி பிடாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில், இலுப்பூர் மதர்தெரஸா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சி. உதயகுமார், பேருராட்சி உறுப்பினர் கணேசன், நகரச் செயலாளர் சத்தியா ராஜேந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும், சந்தனகாப்பு சாத்தியும் வழிபாடு மேற்கொண்டனர்.
    அதைத்தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்த அதிமுகவினர், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai