Enable Javscript for better performance
"கண் தானம் பார்வை  இல்லாதவர்களுக்கு மறுவாழ்வைத் தரும்'- Dinamani

சுடச்சுட

    

    "கண் தானம் பார்வை  இல்லாதவர்களுக்கு மறுவாழ்வைத் தரும்'

    By DIN  |   Published on : 15th October 2016 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கண் தானம் பார்வையற்றவர்களுக்கு மறுவாழ்வைத் தரும் என்பதை மனதில் கொண்டு உதவ முன்வர வேண்டும் என்றார் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் த. பரிமளதேவி.
    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் பிரிவு, 108 ஆம்புலன்ஸ் சேவை, 104 தகவல் ஆலோசனை மையம் சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக பார்வை தின விழாவில் விழிப்புணர்வு நடைபயணத்தைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
    பார்வையற்றவர்களாக உணர்வோம், கண் தானம் செய்வோம் என்ற முழக்கத்தைக் கருபொருளாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது. புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையும், கண்ணில் உள்ள குறைபாட்டை கண்டுபிடிக்க நவீன பரிசோதனைகள் செய்து சிறப்பு ஆலோசனைகளும் அளிக்கப்படுகிறது.
    கண் தானம் செய்ய விரும்புவோர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தை அணுகி கண் தானம் குறித்த இலவச உறுதிமொழி படிவத்தைப் பூர்த்தி செய்து தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். கண் தானம் பார்வையற்றோருக்கு மறுவாழ்வை அளிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
    எனவே, பொதுமக்கள் பார்வையிழந்தோர் படும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்று தாமாகவே கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். இதையொட்டி, கண்தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிடப்பட்டன. இதில், கண் பிரிவு தலைமை மருத்துவர் தையல்நாயகி, 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் ரஞ்சித், மாவட்ட திட்ட அலுவலர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், கீரைத் தமிழ்ச்செல்வன் செவிலியர் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai