Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை: ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க மக்கள் நலக் கூட்டணி முடிவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை: ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க மக்கள் நலக் கூட்டணி முடிவு

    By DIN  |   Published on : 15th October 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி, வரும் 17, 18-ம் தேதிகளில் விவசாய சங்கங்களால் நடத்தப்படவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்க முடிவுசெய்துள்ளது.
    புதுக்கோட்டை மதிமுக மாவட்டச் செயலர் க. சந்திரசேகரன் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்துள்ளதைக் கண்டிப்பதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 17, 18-ம் தேதிகளில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் திரளாகப் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். பொன்னுசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் விடுதலைக்கனல் ஆகியோர் பேசினர். மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கா.சி. சிற்றரசு, மு. மாதவன், க. சுந்தர்ராஜன், ரெ. கருணாநிதி, முருகானந்தம், சு. மதியழகன், சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai