Enable Javscript for better performance
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கத் தாமதம்: நகராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கத் தாமதம்: நகராட்சி அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 15th October 2016 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாதம்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 200 துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் நகராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த மாத ஊதியம் இதுநாள் வரை வழங்கப்படவில்லையாம்.
    மேலும், தீபாவளி முன்பணம், வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொகை, விடுப்பு ஒப்படைப்புத்தொகையும், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 3 சதவிகித ஊதிய உயர்வும் வழங்கப்படாதது குறித்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையைக் கண்டித்து, மாவட்டத் தலைவப் பஞ்சவர்ணம் தலைமையில், ஜனநாயக துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சங்கத்தின் மாநிலத் தலைவர் க.சி. விடுதலைக்குமரன் பேசினார்.
    இதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொ) செ. ராஜாராம் துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சு நடத்தி ஊதியத்தை ஓரிரு நள்களிலும், தீபாவளி முன்பணத்தை வரும் 21 -ஆம் தேதியும் அளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai