Enable Javscript for better performance
நகராட்சிப் பள்ளியில் அஞ்சலக வாரவிழா- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அஞ்சல் துறை இணைந்து சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்திய அஞ்சலக வாரவிழாவில் மாணவிகள் சிறுசேமிப்பு கணக்கைத் தொடங்கினர்.
    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் கி. தேசிங்குராஜன் தலைமை வகித்தார். துணை அஞ்சலக அலுவலர் தனபால், சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்கத் தலைவர் க. மோகன்ராஜ், கிராமப்புற, அஞ்சல், ஆயுள் காப்பீட்டு விரிவாக்க அலுவலர் ஸ்ரீதரன், அஞ்சலக எழுத்தர்கள் சிந்துஜா, அபிராமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று சிறுசேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் 30 பேர் சிறுசேமிப்புக் கணக்கு தொடங்கினர். பள்ளித் தலைமையாசிரியர் சோ. விஜயமாணிக்கம் வரவேற்றார். ரோட்டரி சங்கப் பொருளாளர் அழகப்பன், செயலர் தி. கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி நிர்வாகி விஎஸ். வீரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai