Enable Javscript for better performance
புதுகையில் இளைஞர் எழுச்சி நாள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டக் கல்வித் துறை சார்பில், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்கள் எழுச்சி நாள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. சாந்தி கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். கிழக்கு ராஜவீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றத்தில் பேரணி நிறைவடைந்தது.
    இதில், பிரகதாம்பாள், திருக்கோகர்ணம், திருவப்பூர் ஆகிய அரசுப் பள்ளி, தூய மரியன்னை, திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
    மாவட்டக் கல்வி அலுவலர் உ. பரமசிவம் முன்னிலை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எஸ். சின்னப்பன், இரா. கபிலன், வாகவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சாமி. சத்தியமூர்த்தி, மாவட்ட சாரண இயக்க பொறுப்பாளர் சி. சிவராஜா, என்.எஸ்.எஸ். திட்ட மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai