Enable Javscript for better performance
புதுகையில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டையில் பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருள்கள் 7 நாள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், திருச்சி பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் கைவினைப் பொருட்கள், கைத்தறி துணி வகைகள், நகை வகைகள், கைத்திறன் அறைகலன்களுடன் கூடிய சிறப்பு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கிவைத்தார். பிறகு அவர் பேசியது:
    தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் பலவகை கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் சிறப்புக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் அனைத்து மாநிலங்களின் பல்வேறு கைவினைப் பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. தேசிய விருது, மாநில விருது பெற்ற கைவினைஞர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இச்சிறப்புக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். தங்கள் தனிச் சிறப்புமிக்க கைத்திறன் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
    இங்கு கிடைக்கும் கைவினைப்பொருட்கள், பஞ்சலோக சிலைகள், பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், காகிதக்கூழ் பொம்மைகள், சுடுமண் பொம்மைகள், மூங்கில் பொருட்கள், வாழைநார் பொருட்கள், சணல் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகை வகைகள், அரக்கு வளையல்கள் மற்றும் அனைத்து மாநில கைத்திற சேலை வகைகள், மதுரை சுங்கடி, ஹைதராபாத், ஆந்திர மாநில சேலை வகைகள், சுடிதார், டாப்ஸ் ஆகியன அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 14) முதல் வரும் 20-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும். இக்கண்காட்சியில் அனைத்து பொருட்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார் ஆட்சியர்.
    திருச்சி பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆர். கங்காதேவி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai