Enable Javscript for better performance
பொது சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    பொது சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    இந்த மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள்
    ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு பெரும்பாலான பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், தற்போது முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ரூ. 25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இங்கு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரியப்படுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai