தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவத்தைக் கண்டித்து அக்கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ராஜசேகரன், முன்னாள் மாவட்டச் செயலர்கள் பெரி. குமாரவேல், ப. சண்முகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க. செல்வராஜ், எஸ். சங்கர், வி. துரைச்சந்திரன், ஏ. ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் எம். ஜியாவுதீன் உள்ளிட்டோர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துப் பேசினர்.
இதில், நிர்வாகிகள் கே. தங்கவேல், சி. ஜீவானந்தம், க.சிவக்குமார், கே. முகமதலிஜின்னா, பி. வீராச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.