வட்ட வழங்கல் துறை சார்பில் நாளை குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் குறைகேட்பு முகாம் பின்வரும் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் குறைகேட்பு முகாம் பின்வரும் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை வட்டம் செல்லுகுடி, ஆலங்குடி வட்டம் செரியலூர்- 1, திருமயம் வட்டம் கண்ணங்காரக்குடி, குளத்தூர் வட்டம் நாஞ்சூர், இலுப்பூர் வட்டம் மலைக்குடிப்பட்டி, கந்தர்வகோட்டை வட்டம் வேளாடிப்பட்டி, அறந்தாங்கி வட்டம் ரெத்தினக்கோட்டை, ஆவுடையார்கோவில் வட்டம் மதகம், மணமேல்குடி வட்டம் ரெட்டையாளம், பொன்னமராவதி வட்டம் நல்லூர் கிராமம், கறம்பக்குடி வட்டம் தீத்தான்விடுதி, விராலிமலை வட்டம் பெருமாம்பட்டி, புதுக்கோட்டை வட்டம் புத்தாம்பூர், ஆலங்குடி வட்டத்தில் செரியலூர், திருமயம் வட்டத்தில் ஊனையூர், குளத்தூர் வட்டம் வத்தனாக்குறிச்சியிலும், இலுப்பூர் வட்டம் சேனியபட்டியிலும், கந்தர்வகோட்டை வட்டத்தில் கல்லாக்கோட்டையிலும், ஆவுடையார்கோயில் வட்டத்தில் பவலரசனிலும், அறந்தாங்கி வட்டத்தில் அரசர்குளம் வடபாதியிலும், மணமேல்குடி வட்டத்தில் நெம்மேலியிலும் ஆகிய கிராமங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் முன்னிலையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, முகாம் நடைபெறும் நாளில் அந்தந்தப் பகுதி மக்கள் குடும்பஅட்டை, நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள், தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் தெரிவித்துப் பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com