பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழாவையொட்டி பஞ்சமூர்த்தி திருவீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி விசாக விழாவையொட்டி புதன்கிழமை அக்னி பால்குட விழா நடைபெற்றது. தொடர்ந்து மாலை காவடி எடுக்கம் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன், ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நகரத்தார் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.