அயராத உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி.
புதுகை அருகே லேணாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவர் இரா.வயிரவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில், கடந்த பருவத்தில் வாரியத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:
நான் எளிய குடும்பத்தில் பிறந்து, பட்டம் பெற்று இந்நிலைக்கு உயர, எனது தன்னம்பிக்கையே காரணம். மாணவர்கள் தொடர்ந்து அயராது உழைத்தால் வெற்றி பெறமுடியும். கிராமத்தில் பிறந்ததால் மற்றவரைப் போல முன்னேற முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். பெற்றோர் நம்
முன்னேற்றத்துக்காக சிரமத்தையும் பொருட்படுத்தாமல் படிக்க வைக்கிறார்கள் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் நல்ல முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாமல் காலந்தாழ்த்தாமல் செயல்படுத்தி வெற்றி பெறவேண்டும். இந்த உலகில் படிப்பு ஒருபக்கம் இருந்தாலும், உங்களது தனித்திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த உலகில் உங்களை அடையாளப் படுத்திக்கொள்ள முடியும். ஏழ்மை, குடும்பச் சூழலை பெரிதாக நினைக்காமல் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
முதன்மை செயல் அலுவலர் எஸ்.கார்த்திக் வரவேற்றார். முதல்வர் எஸ்.ஜி. செல்வராஜ் அறிக்கை வாசித்தார்.கவிஞர் நா.முத்துநிலவன் வாழ்த்தினார். கல்லூரி நிர்வாகிகள், அனைத்து துறைத் தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி துணைத்தலைவர் எஸ்.நடராசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.