நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
புதுகை மாவட்ட எஸ்.பி ஜெ.லோகநாதன் முன்னிலையில் நகரக் காவல் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள கணினி கண்காணிப்பு,கட்டுப்பாடு அறையை புதன்கிழமை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது: புதுகை மாவட்டத்துக்கான சாலை பாதுகாப்பு நிதி ரூ.30 லட்சத்தில் திருக்கோகர்ணம், மாலையீடு, மேட்டுப்பட்டி, பிச்சத்தான்பட்டி, பிள்ளைதண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட 36 இடங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நகரக் காவல் நிலையத்தில் கணினி, டிஜிட்டல் திரைகளுடன் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தற்போது திறந்து வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும் என்றார்.
இதில், நகரக் காவல் கண்காணிப்பாளர் பி. ஆறுமுகம், நகரக் காவல் உதவி ஆய்வாளர் விவேக், சிறப்புப்பிரிவு தலைமைக் காவலர் தேவதயவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.