சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பேரவை உறுப்பினர்களை கைது செய்ததைக் கண்டித்து புதுகையில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் 52 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் மறியிலில் ஈடுபட்டதையடுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுகையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் திரண்ட திமுகவினர் ஊர்வலமாக புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றனர். அவர்களை அரசு மருத்துவமனை அருகே போலீஸார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 பெண்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா உள்பட 52 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அறந்தாங்கியில் பேருந்து நிலையம் எதிரில் நகரச்செயலாளர் இரா.ஆனந்த் தலைமையில் 23 பேரும், ஆயங்குடியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகநாதன் தலைமையில் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஆவுடையார்கோவிலில் மீமிசல் முக்கத்தில் அறந்தாங்கி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஒன்றியச் செயலாளருமான உதயம் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதியில் 57 பேர் கைது: பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பு புதன்கிழமை திமுக ஒன்றியச்செயலர் அ.அடைக்கலமணி தலைமையில் 36 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலர் அ.முத்து தலைமையில் காரையூரில் பேருந்து மறியலில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலுப்பூரில் 56 பேர் கைது: வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மாரிமுத்து தலைமையில் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்தர்வகோட்டையில் 50 பேர் கைது: பேருந்து நிலையம் அருகே தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் மாவட்ட அவைத்தலைவர் கே.மாரியய்யா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.