புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2003 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் 7 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தும் முன்னதாக, 6 ஆவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள் உள்பட பல்வேறு துறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுகை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மு. வைத்திலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி. உத்தமன், எஸ். ஆறுமுகம், அ. அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்க மாநிலத் தலைவர் பே.சு. சங்கரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், திரளான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.