விற்பனைக்கு குவிந்துள்ள குழாய் பொருத்திய மண் பானைகள்

புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குழாய் பொருத்திய மண் பானைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.  
Published on

புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குழாய் பொருத்திய மண் பானைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.  
வரலாறு காணாத வகையில் கொளுத்தும் அக்னி வெயிலைச் சமாளிக்க குளிரூட்டப்பட்ட தண்ணீரையும், ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானங்களையும் மக்கள் அதிகமாக பருகுவது உடல் நலனுக்கு தீங்கானது என்பது நாம் அறிந்ததே.
 கோடை வெயிலால் அவதிப்படும் மக்களின் தாகத்தைத் தணிக்கும் இயற்கை குளிரூட்டிகளாக மண்பானைகள் மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை.
 மண்பாண்டத்தொழிலாளி இந்திராணி மண்பாண்ட விற்பனை குறித்து மேலும் கூறியதாவது:
நவீன முறையில் மண்பானையின் அடிப்பாகத்தில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தி எளிதில் குடிநீர் பிடித்து அருந்தும் வகையில் மண் பானைகளைத் தயாரித்துள்ளோம். மானாமதுரை, மதுரை, அழகர் கோயில், புதுகை மாவட்டத்தில் வைத்தூர், வீரமாகாளிகோயில் பெரம்பூர், அறந்தாங்கி, விருதாசலம் ஆகிய ஊர்களிலிருந்து  பானைகளைக் கொள்முதல் செய்து அவற்றில், குடிநீர் பிடித்துக் குடிக்கும் வகையில் குழாய் பொருத்தி சுமார் ரூ.150 முதல் ரூ. 300  வரை விற்பனை செய்கிறோம். உள்ளூர் வெளியூர் செல்லும் பயணிகள் தேடி வந்து வாங்கி செல்கினறனர்.
மேலும், மண் பாண்ட டம்ளர், சாசர், சாப்பாட்டுத் தட்டு, ஜக்குகள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com