புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே காவேரிநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நார்த்தாமலை அருகே மேலூரில் ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லையா தலைமையில் அண்மையில் (மே 16) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்,காவேரிநகர் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் மதுபானக்கடை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்துவது, மேலூர் விலக்கு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர விளக்கு அமைக்க வேண்டும், மேலூர் பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட செயலாளர் செங்கோடன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆர். தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள், விஜயரங்கன், அழகர்சாமி, சோமையா, மீராமைதீன், நாகராஜன், பழனியப்பன், சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.