அரசு இசைப் பள்ளியில் பயில விண்ணபிக்கலாம்

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவ,மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on
Updated on
1 min read

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவ,மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
புதுகை மாவட்ட இசைப்பள்ளியில் நடப்பாண்டுக்கான (2017-18) மாணவ,மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.  குரலிசை, வயலின், மிருதங்கம், பரத நாட்டியம் ஆகிய பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7 ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாகசுரம்,தவில்,தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 12 முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம்: 3 ஆண்டுகள். பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. ஓராண்டுக்கு ரூ.152  பயிற்சிக் கட்டணம்.
மேலும், இலவசப் பேருந்து சலுகை,கல்வி உதவித்தொகை, சீருடை, காலணி, மிதிவண்டி ஆகிய கல்வி சார் நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும், ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.
எனவே, அரசு இசைப்பள்ளியில் சேர ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியரை நேரில் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு,04322 - 225 575.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com