அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அண்மையில் வெளியான எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய எஸ்.ஸ்வேதா(495), எஸ்.உதய்கார்த்திக்(492),கே.சாலினி(489) ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 475-க்கு மேல் 8 பேரும், 450-க்கு மேல் 17 பேரும், 400-க்கு மேல் 31 பேரும் பெற்றுள்ளனர். மேலும், மூன்று பாடங்களில் 3 பேரும், இரண்டு பாடங்களில் 8 பேரும், ஒரு பாடத்தில் 22 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் சி.கண்ணையன், முதல்வர் கே.சுரேஸ்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.